• Thu. Sep 19th, 2024

ஆண்டிபட்டியில் அனுமன் ஜெயந்தி விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆண்டிபட்டி மேற்கு ஓடைத் தெருவில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்.

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலையில் ஆஞ்சநேயருக்கு விபூதி, மஞ்சள், குங்குமம் , பால், தயிர், தேன், இளநீர், பழங்கள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு , கேசரி, வடை செந்தூரம், துளசி வழங்கப்பட்டது.

நவக்கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து, சோதனைகளை சாதனையாக்கி, கலியுகத்தில் தீயசக்திகளை அழித்து, தர்மத்தை காத்து அருள்பாலிக்கும் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் பகவானுக்கு ,மாலையில் புஷ்ப அலங்காரத்துடன், வெண்ணை பழக்காப்பு சாத்தப்பட்டு ,அனுமன் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *