• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

ByKalamegam Viswanathan

Feb 14, 2023

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் பிரசவிக்கும் காலத்தில் பயன்படுத்தும் உபகரணங்களை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் வழங்கினார்.

அண்ணாதோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலைய மருத்துவமனையில் இந்த உபகரணங்கள் அவசர தேவை குறித்து வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனிடம் தகவல் தெரிவித்தனர்.அதன்படி தனது தனிப்பட்ட சேமிப்பு மூலம் குழந்தைகள் பிரசவிக்கும் காலத்தில் பயன்படுத்தும் உபகரணங்களை வாங்கினார்.இவற்றை ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் தலைமை மருத்துவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் செவிலியர்களிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அசோக்குமார், கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்