• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

“கார்டியன்” திரை விமர்சனம்

Byஜெ.துரை

Mar 10, 2024

விஜய் சங்கர் தயாரித்து சபரி, குரு சரவணன் ஆகியோர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “கார்டியன்”.

இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி,பிரதீப் ராயன்,சுரேஷ் மேனன், மொட்டை ராஜேந்திரன்,தங்க துரை,ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி உட்பட மற்றும் பல பேர் நடித்துள்ளனர்.

சிறு வயதில் இருந்தே ராசி இல்லாதவர் என்கிற அவப்பெயருடன் இருக்கிறார் அபர்ணா (ஹன்சிகா மோத்வானி). இந்நிலையில் வேலை தேடி சென்னைக்கு செல்கிறார். அங்கு அவர் நினைப்பது எல்லாம் நடக்கிறது. இதற்கு காரணம் ஓர் ஆவி என்பது ஹன்சிகாவுக்குத் தெரிய வருகிறது.

நல்லது செய்யும் அந்த ஆவியின் உதவியிலிருந்து விடுபட அவர் முயற்சிக்கும் போது, அந்த ஆவியின் கதையை தெரிந்து கொள்கிறார். பிறகு ஹன்சிகா என்ன செய்ய போகிறார்? அந்த ஆவி ஏன் ஒரு சில பேரை பழிவாங்க முயற்ச்சிக்கிறது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு பெண் ஆவியானதற்கு என்ன காரணம் துடிக்க துடிக்க கொல்லும் அந்த நான்கு பேரை பழிவாங்கப் துடிக்க்கும் உக்கிரமான ஆவி, அந்த ஆவிக்குத் தேவைப்படும் ஒரு மனிதன், ஆவியை அடக்க மாந்திரீகம் என ஒரு வட்டத்திற்குள் கதை கொண்டு சென்றுள்ளார்கள் இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன்.

ஹன்சிகாவை பேயாக நன்றாகவே நடித்திருக்கிறார். ஹன்சிகா ஜோடி யான பிரதீப் ராயன் அவ்வப்போது சில காட்சிகளில் வந்து செல்கிறார்.

சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்றார் போல் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

மொட்டை ராஜேந்திரன்,தங்க துரை ஆகிய இருவரும் பார்வையாளர்களை சிரிக்க முயற்சித்துள்ளார் ஆனால் அது எடுபடவில்லை. சாம் சி.எஸ். இசை மற்றும் பாடல்கள் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது

பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். சக்திவேலின் ஒளிப்பதிவு பேயை நன்றாக படம் பிடித்துள்ளது. மொத்தத்தில் “கார்டியன்” திரைப்படம் பேய் படம்