கடந்த செப். 3 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மற்றும் புதுச்சேரி மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளர் அருள்முருகன் ஆகியோர் இன்று திருநள்ளாற்றில் செய்தியாளர்களை சந்தித்தனர். கல்வி, மருத்துவம், மின்னணு பொருட்கள், இருசக்க வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கட்டுமான பொருட்கள், விவசாய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் வரி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அடித்தட்டு மக்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தனர். இந்த வரி குறைப்பு தேர்தலில் வாக்காக மாறுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன்

அடித்தட்டு மக்களின் நிலையை கருத்தில் கொண்டே ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குக்காக செய்யவில்லை எனவும் பிரதமர் மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அதே கேள்விக்கு பதிலளித்த புதுச்சேரி மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளர் அருள்முருகன் வாக்கு வங்கியை மட்டும் நம்பி அரசியல் செய்வது பாஜக இல்லை எனவும் வாக்கு வங்கியை மட்டுமே நம்பி அரசியல் செய்வது காங்கிரஸ் அரசியல் எனவும் தெரிவித்தார். இந்திய மக்களுக்கு இனிப்பான தீபாவளி பரிசு அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)