திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி கலந்துகொண்டு 10.89 கோடி ரூபாய் செலவில் கட்டிடங்கள் திறந்து வைத்தும், 11.05 கோடி செலவில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
20 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்துவைத்தல் , மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் மற்றும் 11 புதிய மருத்துவ கட்டிடங்கள் அடிக்கல் விழா
கொடைக்கானல் பகுதியில் நிறைவடைந்த மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 10. 98 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவ கட்டிடங்கள் உயர் மருத்துவ உபகரணங்கள் தமிழக ஈசி ஆர் சி மையம் மற்றும் 11. 05 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவானது இன்று நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் அவர்கள் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கொடைக்கானல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இருதய அடைப்பு சிகிச்சைக்கான முதலுதவி மாத்திரைகள் அனாசின் உள்ளிட்ட 14 வகை மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் சுகாதார நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.
மலை கிராமங்களில் கர்ப்பிணி பெண்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமலும் ஏற்படும் காரணத்தினால் பிறக்கும் குழந்தைகள் மலை பிரதேசங்களில் அதிகமாக இறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதாகவும் இதனால் கொடைக்கானலில் பெருமாள் மலைப் பகுதியில் 1.5 கோடி செலவில் மகப்பேறு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். பிரசவ தேதி குறித்த நாட்களுக்கு ஏழு நாட்களுக்கு முன்பாகவும் பிரசவத்திற்கு பின்பு ஏழு நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று தினமும் மூன்று வேலை உணவு கொடுப்பதற்கு பத்தாயிரம் ரூபாய் செலவில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மலைகிராம பகுதிகளில் நச்சுப் பாம்புகள் மற்றும் வெறி நாய் கடித்தால் உடனடி சிகிச்சைக்காக தற்போது அனைத்து சுகாதார நிலையங்களிலும் மருந்து தொடர்ந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் போலி மருத்துவர்கள் அடையாளம் காட்டுபவர்கள் ரகசியங்கள் காக்கப்படும் என்றும் போலி மருத்துவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
தமிழகத்தில் புதியதாக ஆறு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தமிழ்நாட்டு மருத்துவக் குழுவினர்களின் கோரிக்கைகளை ஜே பி நட்டா அவர்களிடம் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமர்ந்து கலந்து ஆலோசனைகள் செய்து தமிழகத்தின் கோரிக்கைகளை கேட்டறிந்து குறிப்பெடுத்துக் கொண்டார்.விரைவில் உரிய பதில் வரும் என தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் சிறுவனுக்கு மஞ்ச காமாலை ஏற்பட்டு உயிரிழந்த விவாகரத்தை குறித்து வாகனத்தின் மூலம் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டதாகவும் மஞ்சகாமாலை பரவியதை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
அதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் மகளுடன் வந்த பெண் ஒருவர தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செய்து வரும் நிலையில் படித்த தனது மகளுக்கு வேலை வாங்கி தர வேண்டும் எனவும், தனது குடும்பம் மிகவும் சிரமம் அடைந்துள்ளதாக கூறி, அமைச்சரின் காலில் விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.