• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பசுமை நிழற்பந்தல் அமைப்பு

Byவிஷா

May 10, 2024

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளைப் பாதுகாக்கும்; வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக ரிப்பன் மாளிகை உள்பட 10 போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ரிப்பன் மாளிகை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் அமைக்கப்பட்ட நிழற்பந்தலை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து, பந்தலின் நிழலில் நின்ற வாகன ஓட்டிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவல்துறை உதவியுடன் முதற்கட்டமாக 10 இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இந்தப் பந்தல்கள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் 5.30 மீ. உயரத்தில் போரஸ் துணி போட்டு நிழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து மண்பானைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் வரவேற்பை பொருத்து இதர பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களிலும் அத்துறையுடன் இணைந்து நிழற்பந்தல் அமைக்கப்படும். மழை காலங்களிலும் இதேபோன்று அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.
மேலும், மருத்துவப் பணியாளர்களின் மேற்பார்வையில் 299 இடங்களில் ஓஆர்எஸ்கரைசல் வழங்கப்பட்டு வரு கிறது. இதுவரை 1.44 லட்சம் பேருக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.