77வதுகுடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் ஒன்றியத் திற்குட்பட்ட வாலாஜாநகரம், கோவிந்தபுரம், தாமரைகுளம், ஓட்டக்கோவில், இராயம்புரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் ,கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2026–2027ஆம் நிதியா ண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதேபோல், குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டகலெக்டர் வழிகாட்டுதலின் படி கோவிந்தபுரம் ஊராட்சியில் இ-சேவை மையக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ. மரகதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத் தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் பா. குமாரி வாசித்து கூட்டத்தில் பங்கேற்ற அனை வருக்கும் நன்றி கூறினார்.

தாமரைகுளம் ஊராட்சியில், இ-சேவை மையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மண்டல துணை பிடிஒ ஆ. மரகதம் மற்றும் கிராம பொதுமக்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத் தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் முத்து வாசித்தார்.
ஓட்டக்கோவில் ஊராட்சியில் இ-சேவை மையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் அழகுவேல் கூட்டத் தீர்மானங்களை வாசித்து, பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ. மரகதம், பதிவு எழுத்தர் வெங்கடாஜலம் மற்றும் கிராம பொதுமக்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர். இராயம்புரம் இ சேவை மையத்தில் நடைபெற்றகிராமசபை,கூட்டத்தில்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ .மரகதம்,தலைமை ஆசிரியர் சகாயராணி,கிராம பொதுமக்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத் தீர்மானங்களை ஊராட்சி செயலாளர்சு.பார்வதிவாசித்து, நிகழ்வில் பங்கேற்ற அனை வருக்கும் நன்றி கூறினார்.பொட்டவெளி ஊராட்சி இ சேவை மையத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மண்டல துணை பி.டி.ஒ ஆ .மரகதம்,மக்கள் நல பணியாளர் செல்வராணி மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூட்டத் தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் ஐ .முருகேசன் வாசித்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.






