• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,

BySeenu

Nov 30, 2025

கோவை கே.ஜி. குழுமங்களின் கீழ் இயங்கி வரும் கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.கே.ஜி. மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக,மைசூரு ஜே.எஸ்.எஸ். உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தர் டாக்டர் பசவங்கவுடப்பா கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு இளங்கலை. மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கினார். இதில்,செவிலியர் துறை மாணவர்களும்,பிசியோதெரபி,அலய்டு ஹெல்த் சயின்ஸ் ,மற்றும் ஜி.என்.எம்.ஆகிய துறைகள் என மொத்தம் 315 இளங்கலை மாணவர்களுக்கும்,45 முதுகலை மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து,தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்கள் சிறப்பு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய தலைமை விருந்தினர்கள்,நவீன தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் ,மருத்துவ துறையில் தற்போது வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால்,மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். விழாவில் கல்லூரி முதல்வர்,துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள், என பலர் கலந்து கொண்டனர்.