• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

BySeenu

Jan 12, 2025

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா என்.ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார். பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கான உறுதிமொழியைக் கூறினார். மாணவர்கள் அவ்வுறுதிமொழியைத் திரும்பக் கூறினர். இந்த நிகழ்வில் தமிழக அரசின் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் செயல் உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எஸ். வின்சென்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருந்துவர் நல்ல பழனிசாமி இந்நிகழ்விற்குத் தலைமையேற்றார்.

கோவை மருத்துவ மையத்தின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் அருண் என்.பழனிசாமி இவ்விழாவில் கலந்து கொண்டார். டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி.புவனேஸ்வரன் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி உரை வழங்கினார். டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் இணை செயல் அலுவலர் முனைவர் மா.நடேசன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி, டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்விசார் இயக்குநர் முனைவர் கு. இராமமூர்த்தி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலை 1903, முதுகலை 390, முனைவர் பட்டம் 12. மொத்தமாக 2305 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.