• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்து

ByA.Tamilselvan

Oct 25, 2022

என் மகனை பார்க்கணும் என்ற ஒரே வார்த்தையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்து
பிக்பாஸ் 6வது சீசனில் பல துறைகளில் இருந்த கலைஞர்கள் வந்துள்ளார்கள். நடிகர், மாடல், சின்னத்திரை பிரபலம், மீடியா, திருநங்கை, பொதுமக்களில் ஒருவர் என எல்லாம் கலந்து கலவையாக இந்த பிக்பாஸ் 6வது சீசன் போட்டியாளர்கள் உள்ளார்.
அப்படி மக்கள் கொண்டாட் பிக்பாஸ் 6வது சீசனில் முதல் ஆளாக வீட்டிற்குள் சென்றவர் ஜி.பி.முத்து. மக்கள் இவர் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்தார்கள், கண்டிப்பாக இவர் அனைவருடனும் போட்டிபோட்டு வெல்வார் என நினைத்தார்கள்.
ஆனால் அது நடக்கவில்லை, ஜி.பி. முத்து சில காரணங்களாக அவராகவே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.அக்டோபர் 9ம் தேதி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஜி.பி.முத்து அந்த பிரம்மாண்ட வீட்டில் 14 நாட்கள் இருந்துள்ளார். அதற்காக அவர் மொத்தமாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.


அந்த வீட்டில் இருந்து வெளியேறிய ஜி.பி.முத்து சொந்த வீட்டிலிருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வீட்டில் தரையில் அமர்ந்துள்ளார். அவர் முன் அவரது இரண்டு மகன்கள், 2 மகள்கள் உட்கார்ந்திருக்கின்றனர். அவர்கள் முன் பிரியாணி பொட்டலம் உள்ளது. அவர் பார்க்கணும்னு அடம்பிடித்து வெளியேறிய மகன் விஷ்ணுவை அருகில் வைத்துக்கொண்டு மக்களே இதப்பாருங்க என் பய விஷ்ணு என பிரியாணியை ஊட்டுகிறார். என்ன பாக்காம ஏங்கி போய்ட்டான், ஏம்பா ஏங்கிப்போனாயா என்று மகன் விஷ்ணுவை பார்த்து கேட்கிறார். அப்புறம் அவரே ஆமா ரொம்ப ஏங்கிட்டான், மெலிஞ்சு போயிட்டான் என்று சொல்கிறார். அனைவருக்கும் பிரியாணி ஊட்டிவிட்டு மக்களே எனக்கு உடம்பு சரியில்ல படுக்கபோறேன்னு சொல்கிறார். முதல் வீடியோ என்றவுடன் எதையாவது பரபரப்பாக போட்டிருப்பார் என்று பார்த்தவர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.