தமிழக அரசு இன்று அரசாணை ஒன்றை வெளியிட்டுளளது. இது அரசு ஊழியர்களுக்கு இடியாய் வந்துள்ளது.
இதில் அரசு வேலையில் உள்ள கர்ப்பணி பெண்களுக்கான விடுப்பு 9 மாதங்களில் இருந்து, 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், HRA எனப்படும் வீடு வாடகைக்கான படி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு முன்னர் மகப்பேறுகால விடுப்பு எடுக்கும் அரசு உழியர்களுக்கு 9 மாதங்கள் விடுப்புடன் சம்பளத்தில் எந்தவோரு பிடிதமும் இருக்காது. ஆனால் தற்போது விடுப்பின் காலம் நீடிக்கப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இதனால் தற்போது விடுப்பில் உள்ள உழியர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதை பற்றி ச. இ. கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநில செய்யலாளர் TNGEA அவர்கள் கூறும்போது, இந்த ஆணை அரசு உழியர்களுக்கு ஏற்ப்புடைது இல்லை என்றும், இந்த அரசு, அரசு ஊழியர்களுக்கு பல நன்மைகளைச் செய்யும் என்ற நம்பிக்கையில் தான் இப்போது வரை இருக்கிறோம்.
ஆனால் இந்த அரசனை எங்களுக்கு அதிருப்பதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், HRA என்பது ஒவ்வொரு உழியர்களுக்கும் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்க்கு தக்கவாறு மாறுபடும், இதனால் மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை குறையும் என அவர் தெரிவிததுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்ட தொடரில் புதிய ஓய்வூதிய திட்டத்தை குறித்த அறிவிப்புகள் வரும் என எதிர்பார்த்த அரசு உழியர்களுக்கு ஏமாற்றம் என்றால், இந்த ஆணை ஆளும் கட்சியின் மீது அரசு உழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த ஆணையை உடனடியாக திரும்பப்பெறாவிட்டால் இதற்கான போராட்டங்களை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.