• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து

ByKalamegam Viswanathan

Apr 25, 2023

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையில் திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய அரசு பேருந்து.


மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்கள் நடைபெற்றது.இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டலம் 5 அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் இரண்டு நாட்களாக செய்த கனமழையால் தண்ணீர் அதிகமாக தேங்கியிருந்த நிலையில், இன்று காலை மாட்டுத்தாவணி நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் தியாகராசர் கல்லூரி செல்வதற்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளுடன் ஒட்டுனர் ராஜாங்கம் என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து தண்ணீரில் சிக்கியது. இதில் பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் தங்களது உடைமைகளுடன் தண்ணீரில் இறங்கி சென்ற நிலையில் மீட்பு வாகனங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு வாகனம் மூலம் அரசு பேருந்து மீட்கப்பட்டது.