கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மகாதானபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் வெள்ளிக்கிழமை கோமாதா மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோமாதா மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்று வருகிறது. இதன் 100 ஆவது பூஜை மகாதானபுரம் நவநீதகிருஷ்ணன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். எஸ்.சுந்தரம் முன்னிலை வகித்தார். கோமாதா பூஜையை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆடைதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வழக்குரைஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட திமுக நிர்வாகிகள் ரோச், எம்.ஹெச்.நிசார், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் டி.பிரேமலதா, கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் ஸ்ரீரெங்கநாயகி, வரலெட்சுமி, செந்தில்மோகன், புஷ்பராஜ், அனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
