தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் விழா..!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்தநாள் அன்று கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 19 குழந்தைகளுக்கு அமைச்சர் V.செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி தங்க மோதிரம் மற்றும் புத்தாடைகளை கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ரவி வழங்கினார். வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இளைஞர் அணி அமைப்பாளர் ஹக்கீம்,துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், சூரியன் தம்பி, அருணாச்சலம், நாகராஜ், லாரா பிரேம், மதன், மாவட்டத் துணைச் செயலாளர் அசோக் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் டி பி சுப்பிரமணியம், பகுதி கழக செயலாளர்கள் சிவா, பொன்னுச்சாமி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், விளையாட்டு மேம்பாட்டு அணி தியாகராஜ், கோபிநாத், நந்தகுமார், முன்னாள் பகுதி செயலாளர் மாணிக்கம், சோமசுந்தரம், மாவட்ட பிரதிநிதி ஆனந்த், கௌதம், மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.