• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு-மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!

ByP.Kavitha Kumar

Mar 4, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியப் பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி ஒரு சவரன் 64,000 ரூபாய்க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதையடுத்து தங்கம் விலை கடந்த ஒரு வார காலமாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது.

கடந்த மார்ச் 1-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 63,520 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 7,940 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களாக எந்த மாற்றமும் இன்றி தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து.8,010 ரூபாய்க்கும், சவரனுக்கு .560 ரூபாய் உயர்ந்து .64,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 107 ரூபாய்க்கும் ஒரு கிலோ 1,07,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.