• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உங்க தயாரிப்புல படம் பண்ணா ப்ரொமோஷன் போவிங்க..மத்தவங்க தயாரிப்பு படம்-னா கேவலமா..?

Byகாயத்ரி

Jan 28, 2022

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் நயன்தாரா. இப்போது வரையில் கோடி கணக்கில் தான் அம்மணியின் சம்பளமாம்.

சமீபத்தில் நயன்தாராவை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சராமாரியாக திட்டி தீர்த்துள்ளார். ஒரு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே.ராஜன் நயனை பற்றி தாறுமாறாக விமர்சனம் செய்துள்ளார்.

நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் படங்களில் ப்ரொமோஷன்களிலும் இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்காமல் டிமிக்கி கொடுப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவே அவருடைய படத்தின் எந்த ப்ரொமோஷனுக்கு வருவது இல்லை என்று நக்கலாக கூறியுள்ளார்.

நயன்தாராவிடம் இதுபற்றி கேட்டால் இதுபோன்ற விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அனைவரும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எண்ணுவார்கள். ஆனால் படம் வெற்றி பெறாவிட்டால் எனக்கு அது கெட்ட பெயர் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.

இந்த பதிலுக்கு பொங்கி எழுந்து விமர்சித்த கே.ராஜா நீ நடித்த படம் தோல்வியை சந்திப்பதற்கு தான் சம்பளம் 5 கோடியை வாங்குறியா? என்று கோவமாக பேசியுள்ளார்.

படத்தில் நடிக்கும் போதே அது வெற்றி ஆகாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் தான் நடிப்பியா ? அதுவே உங்களுடைய சொந்த தயாரிப்பில் வெளியான நிகழ்ச்சிக்கான “நெற்றிக்கண்” படத்தின் ப்ரொமோஷனுக்கு மட்டும் வருகிறாய் இதெல்லாம் கேவலமாக இல்லையா ? என்று நயன்தாராவை பகிரங்கமாய் திட்டி விளாசியுள்ளார்.

இவ்வாறு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜா நடிகை நயன்தாராவை கடுமையாக விமர்சித்தது அங்கு இருந்த பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயம் நயன் காதுக்கு சென்றால் என்ன நடக்கும்னு நாம பொருத்திருந்து பார்ப்போம்…