விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம்.இக் கிராமத்தில் மின் மோட்டார் இணைப்பு பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

இதனால் தனியார் வண்டிகளில் விலைக்கு குடிநீரை வாங்க வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.இது குறித்து பல முறை புகார் செய்தும் சரி செய்யாததால் ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். சனிக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாரிகள் யாரும் அலுவலகத்திற்கு வராததால் யாரிடம் புகார் செய்வது என தெரியாமல் ஏமாற்றத்துடன் காலி குடங்களுடன் ஊர் திரும்பினர்.