காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் பாரதப் பிரதமரின் உஜ்வாலா யோஜனா 3.0 திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் சுமார் 50 பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களை வழங்கினார்.

திருநள்ளாறு தொகுதியில் 2.0 உஜ்வாலா திட்டத்தின் மூலமாக 250க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 3.0 திட்டத்தின் கீழ் இன்று திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 4ம் கட்டமாக 50பயனளிகளுக்கு கேஸ் சிலிண்டர்களை சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் வழங்கினார். இதுபோல பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட 250 பயனாளிகளுக்கு கேஸ் அடுப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு, கடந்த மாதம் 3.0 மூலம் 50 பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உஜ்வாலா திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் திட்டத்தின் மூலம் இலவச கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகளை பெற்றுத் தந்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பரமேஸ்வரி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் ராஜ்குமார், தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று (24.02.26) பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் ஏழை எளிய மக்களுக்கான உஜ்வாலா யோஜனா 3.0 திட்டத்தின் கீழ் நான்காம் கட்டமாக திருநள்ளார் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நமது சட்டமன்ற உறுப்பினர் திரு.G.N.S.ராஜசேகரன் அவர்கள் பயனாளிகளுக்கு இலவச அடுப்பு ,எல்பிஜி சிலிண்டர் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பரமேஸ்வரி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் ராஜ்குமார், தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.






