• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உலக அளவில் 22.83 கோடியைக் கடந்தது

கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இன்னும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. சில நாடுகள் மூன்றாவது அலையை எதிர் கொண்டுவருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.83 கோடியைக் கடந்துள்ளது.

தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 20.49 கோடிக்கும் அதிகமானோர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.87 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.