• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி

BySeenu

Jul 29, 2024

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே கூரையின் கீழ் அனைத்தும் கிடைக்கும் வகையில் ரஷ் ரிபப்லிக் சார்பில் ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி கோவையில் நடைபெற்றது.

கோவையை சேர்ந்த பிராண்டிங் டிசைன் நிறுவனமான ‘ரஷ் ரிபப்ளிக்’ ஏற்பாடு செய்த பிரபல நிகழ்வுகளான ‘க்ளீ சோஷியல்’ கண்காட்சி ஜி.வி ரெசிடன்சியில் உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ்’இல் நடைபெற்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் பங்கேற்பாளர்கள் வார இறுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடும்பத்தினருடன் செலவிட்டனர்.

ஆக்டேவ் ராக்கர்ஸின் உற்சாகமான இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சிஎஸ் ஹவ்லர்ஸ் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது.6 ஆண்டுகளாக Santa Social – என்ற கிறிஸ்துமஸ் திருவிழாவை ஏற்பாடு செய்து வந்த நிலையில் இது Glee Social இன் 3வது பதிப்பாகும்.

அதே நேரத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம் என ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லக்ஷ்மிகாந்த் மற்றும் மது ஆகியோர் தெரிவித்தனர்.