குமரி மாவட்டத்திற்கு நாஞ்சில் நாடு என்னும் சிறப்பு பெயர் மன்னர் ஆட்சி காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது குமரி மாவட்டம்.(இப்போது குட்டநாடு)
குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்து தென்னை, ரப்பர்,மீன் பிடித்தல் என்ற வரிசையில். தோவாளை தாலுகா பகுதியில் அன்று தொட்டே பூ விவசாயமும் முக்கியமாக திகழ்ந்தது.

கேரள மக்களின் விழாவான ஓணம் பண்டிகை விழாவில் பெரும் பங்கு வகிப்பது தோவாளை பூக்களே. தோவாளையில் சிறந்த பூ மாலை கட்டும் கை வினஞ்சர்களால் கட்டப்படும் “மாணிக்க மாலைக்கு”. புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022_ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சாய் காந்தி என்பவர் தோவாளை மாணிக்க மாலை மற்றும், கும்பகோணம் வெற்றிலைக்கு. புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று (ஏப்ரல்_1) தோவாளை மாலை மற்றும் கும்பகோணம் வெற்றிலைக்கும் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.