• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சி திட்டப்பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு…

Byகாயத்ரி

Jun 6, 2022

சென்னையில் உள்ள தாம்பரத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 215 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி அனகாபுத்தூரில் தினசரி அங்கன்வாடி மையம் கட்டும் பணியும், தரைப்பாலம் அருகே கழிவு நீர் உந்து நிலையங்கள் கட்டும் பணியும், அடையாறு ஆற்றின் கரையோரம் மழைக் காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்று வருகிறது. இதேப்போன்று கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம், செம்பாக்கம், சிட்லபாக்கம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளும், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த வளர்ச்சி திட்டப்பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது ஆற்றின் கரையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதன்பிறகு பம்மல் திருப்பனந்தாள் ஏரியை தூர் வாருவது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் ஆய்வின் போது செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், கண்காணிப்பு பொறியாளர் பாண்டுரங்கன், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.