• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Mar 28, 2025

1) கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது, கிராபைட்.

2) கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்,
‘நீர்வாயு’.

3) காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.

4) பெருலா’ என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான், பெருங்காயம்.

5) கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர், திருமாவளவன்.

6) உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம்.

7) மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி.

8) பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.

9) கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க்.

10) யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.