• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 30, 2023
  1. மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும்
    நிறுவியவர்?
    இராமலிங்க அடிகளார்
  2. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்?
    இராமலிங்க அடிகளார்
  3. ”ஆர்வலர்”– பொருள் தருக?
    அன்புடையவர்
  4. “என்பு”– பொருள் தருக?
    எலும்பு (உடல், பொருள், ஆவி)
  5. ”வழக்கு”– பொருள் தருக?
    வாழ்க்கை நெறி
  6. ”ஈனும்”– பொருள் தருக?
    தரும்
  7. “ஆர்வம்”- பொருள் தருக?
    விருப்பம்
  8. “நண்பு”- பொருள் தருக?
    நட்பு
  9. “வையகம்”- பொருள் தருக?
    உலகம்
  10. ”மறம்”- பொருள் தருக?
    வீரம்