• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 3, 2023
  1. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சிஅளித்தவர்? பலராமன்
  2. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
    கிளி
  3. ”தாய்மொழி” என்பது?
    தாய் குழந்தையிடம் பேசுவது
  4. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த
    மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?
    தமிழின் பழமை
  5. இரண்டாம் வேற்றுமை உருபு?
  6. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
    அழகு
  7. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
    உம்மைத் தொகை
  8. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?
    கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்
  9. ”தளை” எத்தனை வகைப்படும்?
    7
  10. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
    முற்றுப் போலி