• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Dec 30, 2021
  1. மலர்என்றால்என்ன ?
    மலர்ஃபூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு.
  2. மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது? சூரியகாந்தி
  3. மஞ்சரிஎன்றால்என்ன?
    ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.
  4. மலரின் உறுப்புகள் என்ன?
    பூவடிச் செதில், பூக்காம்பூச் செதில், பூத்தளம், புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள் வட்டம்,
    சூலக வட்டம்
  5. மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
    ஆகாயத்தாமரை
  6. கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?
    காந்தள்
  7. அல்லி வகைகள் என்ன?
    குளிரை தாங்குகிற நீர் அல்லிகள் பகலில் மட்டுமே பூக்கும்,
    ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில் அல்லது இரவில் பூக்கின்றன.
  8. இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விருதில், பத்ம என்கிற வார்த்தை எந்த பூவைக்குறிக்கும் ?
    தாமரை
  9. எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்?
    மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் என்றழைக்கிறார்கள்.
  10. எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?
    மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை. இது தற்போது மீன் சந்தையாக உள்ளது