• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 13, 2023

1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது? சென்னை

2. கொடிகளைப் பற்றி ( FLAG ) பற்றி அறிந்து கொள்ள உதவுவது? வெக்சிலோலஜி

3. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?   1952

4. ” நாணய உலோகம் ” எனப்படுவது? தாமிரம்

5. ” NUMISMATICS ” என்பது எதனைப் பற்றியது? நாணயம்

6. ” அறிவியல் சோசியலிசத்தின் தந்தை ” எனப்படுபவர்? கார்ல் மார்க்ஸ்

7. ஒரு காரட் என்பது எதற்கு சமமானது? 200 மில்லி கிராம்

8. முதல் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்பட்ட ஆண்டு? 1978

9. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட நவீன வாக்களர் அடையாள அட்டை எந்த மாநிலத்திற்கு முதன்முதலாக வழங்கப்பட்டது? திரிபுரா

10. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி தமிழ்நாட்டில் எங்கு உள்ளது? காவலூர் ( வேலூர் )