• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 18, 2024

1. 1916-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி உருவாகக் காரணம் பிராமண ஆதிக்கத்தைக் குறைக்க

2. 1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன்

3. தமிழகத்தின் எந்த பரம்பரைக்கலை இந்தியா முழுவதும் பெருமை பெற்றுள்ளது? பரதநாட்டியம்

4. தமிழ்த்தாய் சிலை எந்த ஊரில் நிறுவிப்பட உள்ளது? மதுரை

5. பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது சென்னை மாகாணத்தில் கிராமப் பகுதிகளில் வசித்த மக்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் “சென்னை மாகான சங்கம்” என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது? 1892

6. தமிழக அரசினால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது? 1955

7. பிராமணர் அல்லாதோரின் உரிமைச் சாசனத்தை வெளியிட்டவர் யார்? பிட்டி தியாகராயர்

8. தனித்தமிழ் இயக்கத் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? மறைமலை அடிகள்

9. 1953-இல் ஆந்திரா உருவான பின்னர் தமிழக – ஆந்திரா எல்லைச் சிக்கல் தீர்க்க அமைக்கப்பட்ட ஆணையம்/குழு எது? எச்.வி.படாஸ்கர் குழு

10. பெரியாரை “தமிழ்நாட்டின் ரூசோ” என பாரட்டியவர் யார்? சர்.ஏ.ராமசாமி முதலியார்