• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாற்று திறனாளிகள் நலத்துறையின் பொதுக்குழு கூட்டம்..,

ByT. Balasubramaniyam

Aug 11, 2025

திருச்சி டி எம் எஸ் எஸ் வளாக கூட்ட அரங்கில், மாற்று திறனாளிகள் நலத்துறையின் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நலச் சங்கம் பொதுக்குழு கூட்டம் , புதிய நிர்வாகி பணியேற்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பல்நோக்கு மறுவாழ்வு பணியாளர் ரமேஷ் வரவேற்றார்.கூட்டத்துக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் நா. சாமிநாதன் தலைமை தாங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இரவிச்சந்திரன், முருகேசன், க.மூர்த்தி உள்ளிட்டோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவராக நா சாமிநாதன், மாநில பொதுச்செயலாளராக க.மூர்த்தி, மாநில பொருளாளராக பா ஜெய்சங்கர்,மாநிலத் துணைத் தலைவர்களாக முருகேசன், பாலகிருஷ்ணன்,செந்தில் முருகன், ஜெயக்குமார், மாநிலத் துணைச் செயலாளர்களாக வி. வெங்கடசுப்பிரமணியன்,பிரபாகரன்,எம் ரமேஷ் ,பி கனகராஜ்,சங்கத்தின் மாநில ஆலோசராக ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாகமு பிச்சாண்டி, சுப்பிரமணி,கார்த்திகேயன்பிரபு, முருகன், முனியப்பன், முனுசாமி, சண்முக மூர்த்தி, உள்ளிட்டோர் போட்டியின்றி ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளி நல அலுவலகங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் அரசு உடனே நிரப்பிட வேண்டும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில்பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் சலுகைகளை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மு பிச்சாண்டி (செயல் திறன் உதவியாளர், நன்றிகூறினார்.