• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் திருமணம்?

[11:15 AM, 2/10/2022] A.today Priya: தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த ‘கடல்’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார், கெளதம் கார்த்திக். இதனைத்தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், ஹரஹர மஹாதேவகி, IAMK, இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்தார். இவருக்கென்று தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் கெளதம் கார்த்திக்குடன் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கும் மஞ்சிமாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாரி இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், ஏப்ரல் மாதத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்று கூறப்படும் நிலையில் இவர்கள் இருவரும் தங்களது காதலை வெளியுலகிற்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை.

தற்போது கெளதம் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் இவர்கள் திருமணம் குறித்த தெளிவான தகவல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். தற்போது கெளதம் கைவசம் ‘பத்து தல’, ‘செல்லப்பிள்ளை’, ‘யுத்த சத்தம்’ போன்ற படங்கள் உள்ளன, அதேபோல மஞ்சிமாவும் தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து FIR என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
[11:15 AM, 2/10/2022] +91 88700 41191: வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்பிஐ ஆளுநர்

வ.செந்தில்குமார்

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் அறிவிப்பு.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுக கால கடன்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ளார். குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4% ஆக தொடரும் என்றும் கூறியுள்ளார்.

பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதேபோல், ரிசர்வ் வங்கியில், வங்கிகள் செய்யும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ) 3.35% ஆகவே தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வீடு, கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையிலேயே இருக்கும் என்றும் மும்பையில் வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்திய பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இதனை தெரிவித்துள்ளார். 2021-22 நிதியாண்டில் CPI பணவீக்கம் 5.3% ஆகவும், 2022-23 நிதியாண்டில் 4.5% ஆகவும் உள்ளது.

உணவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச நிதியத்தின் (IMF) கணிப்பின்படி உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் பொருளாதாரம் இந்தியாதான். 2022-23-ல் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5% இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.