கௌசிகா நதியை புதுப்பிக்க அளவீட்டு பணிகள் துவக்க, ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் புதிய முயற்சி எடுத்துள்ளது.
கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் கௌசிகா நதியை புதுப்பிக்க முடிவு செய்து அதற்கான அளவீட்டு பணிகள் துவங்கியுள்ளது. ரோட்டரி மாவட்டம் 3201 உடன் கௌசிகா நீர் கரங்கள் இணைந்து இதனை மேற்கொள்கிறது. வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ரோட்டரி கிளப் 3201 கவர்னர் சுந்தரவடிவேலு பணியைத் துவக்கி வைத்தார்.
இது குறித்து ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு கூறுகையில் கௌசிகா நீர்க்கரங்கள் அமைப்புடன் இணைந்து கௌசிகா நதியை புதுப்பிக்கும் பணியை கோவையில் துவக்குகிறது எனவும், கோவை மாவட்டத்தின்
நதியாக திகழ்ந்த கௌசிகா நதி, குறித்து புராணங்களிலும் இதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
இப்பணியில் ஒவ்வொரு கட்டத்தின் திட்ட செலவையும் பிரித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி குழுக்களின் பொறுப்பில் திட்ட செலவை ஏற்கும் வகையில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இவ்விழாவில், ரோட்டரி மாவட்ட பொது செயலாளர் சுப்ரமணியன், கொண்டையம் பளையம் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ், கௌசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் செயலாளர் சிவராஜா, அன்னூர் தாசில்தார் குமரி ஆனந்தன், ரோட்டரி கிளப் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பத்மக்குமார், எஸ்.எஸ்.குளம் நகராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, கௌசிகா நீர்க்கரங்கள் நிறுவனர் பி.கே செல்வராஜ், அத்திக்கடவு கௌசிகா நீர்க்கரங்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர் ஜி.விஜயபாபு, கோவில்பாளையம் காவல் துறை ஆய்வாளர் பி.செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
