• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குப்பை வண்டி ஓட்டும் ஒப்பந்த ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

BySeenu

May 3, 2025

கோவை மாநகராட்சியில் இரண்டாவது நாளாக குப்பை வண்டி ஓட்டும் ஒப்பந்த ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனங்கள் சில மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில் குப்பை வண்டி ஓட்டும் ஒப்பந்த ஓட்டுனர்கள் புதிதாக வந்துள்ள ஒப்பந்த நிறுவனம் தங்களுக்கான சம்பளம் எவ்வளவு, சலுகைகள் என்னென்ன, வேலை நேரம் எவ்வளவு என்பதெல்லாம் தெரிவிக்காமல் தங்களை வேலை செய்ய நிர்பந்திப்பதாக கூறி, இரண்டாவது நாளாக அந்தந்த மண்டலங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக வந்துள்ள நிறுவனம் எங்களுக்கான மருத்துவ பலன்கள் என்ன? சம்பளம் எவ்வளவு? என்னென்ன சலுகைகள் உள்ளது என்பதை எல்லாம் தெரிவிக்காமல் இருப்பதாகவும், மேலும் கோவை மாநகரில் உள்ள வேலையாட்களுக்கு வேலை வழங்காமல் வெளியூர்களில் இருந்து ஆட்களை வரவழைத்து அவர்களுக்கு வேலை தருவதாக குற்றம் சாட்டினர்.

பல்வேறு மண்டலங்களில் உள்ள குப்பை வண்டிகள் பழுதடைந்து இருக்கின்ற நிலையில், அவற்றை சரி செய்யாமல் புதிதாக வாகனங்களை வாங்கி இயக்குவதாகவும், சில வாகனங்களில் பழுதை நீக்காமலேயே எஃப் சி காட்டி விடுவதாகவும் குற்றம் சாட்டினர். எனவே புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் தங்களை நேரில் சந்தித்து, எங்களது தேவைகள் என்னென்ன என்பதை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.