கோவையில் தீபாவளியில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் பலரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கோவையில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகரின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இதனால் நகரின் அனைத்து தெருக்களிலும் சாலைகளிலும் பட்டாசு குப்பைகள், பலகார பாக்ஸ்கள் சேர்ந்தன.

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் கோவை மாநகரில் சேர்ந்துள்ள குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணிகள் அகற்றி வருகின்றனர். வழக்கமாக சேரும் குப்பைகளை விட தீபாவளி நாளில் அதிகளவு குப்பைகள் சேர்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.