இன்று (07-09-2024) சிவகங்கை நகர் இந்திரா நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நமது நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அப்போது உடன் நகராட்சி மேலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், மதியழகன் மற்றும் வட்டப்பிரதிநிதி RD சேகர், சேது, மகேந்திரன், கணேசன், கேண்டீன் ரவி, மகளிர் அணி ராஜேஸ்வரி, இந்திரா மற்றும் 27வது வார்டு இளைஞர்கள், விழா கமிட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



