ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி இந்துமுன்னணி சார்பில், யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது.
ஆண்டிபட்டி வைகைஅணை சாலைப்பிரிவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில் தலைமை விநாயகர் திருமேனி வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதையடுத்து விநாயகருக்கு கண்திறந்து வாழை இலையில் 18 வகையான கனிகள் வைக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதேபோன்று ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் வலம்புரி விநாயகர், வீரவிநாயகர், வெற்றி விநாயகர், கல்யாணவிநாயகர், வழிகாட்டி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, பழம் ஆகிய பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.








