மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே விடியல் என்ற புதிய பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் நிறுவனத்தை வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன் திறந்து வைத்தார்.

சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் தங்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு ப்ளெக்ஸ் பேனர்கள் உடனடியாக தயார் செய்யும் பொருட்டு இந்த புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது நிகழ்ச்சியில் திமுக அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் சமுதாய பிரமுகர்கள் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர் விடியல் பவன் வரவேற்று சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதில் நிறுவன பணியாளர்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








