விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பட்டாசு விற்பனையாளர் மகன் உள்பட 4 பேர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் 2024 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களை நேரில் அழைத்து சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி அசோகன் பாராட்டினார்.

சிவகாசி அருகே தாயில்பட்டியை சேர்ந்தவர் கோகுல கண்ணன், பூவநாதபுரம் கோகுல், பள்ளபட்டி அப்சரா,சிவகாசி ரீட்டா மஹியா, ஆகியோர் இந்தியா ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெற்று டேராடூனில் உள்ள பயிற்சி மையத்திற்கு பயிற்சி செல்ல உள்ளார்கள். சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் அரசன் அசோகன் தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.