தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, முத்துகிருஷ்ணாபுரம் முதல் டிவி ரெங்கநாதபுரம் வரை சுமார் 2 கி.மீ சாலைகள் முழுவதும் குண்டு குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சாலைகள் முழுவதும் சேதமடைந்ததால் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளுக்கு அதிக பாரத்துடன் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருவதாலும் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே கன்னிய மங்கலம் , டி.வாடிப்பட்டி, அய்யணத்தேவன்பட்டி, டி.வி ரெங்கநாதபுரம் வேகவதி ஆசிரமம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குண்டும், குழியுமாக சாலைகள் காணப்படுவதால் பொது மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.