திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான என்.எல் ஸ்ரீ இயக்கும் இரண்டாவது படமாக ப்ரண்ட்ஸ் மேஜிக் பிலிம்ஸ் புரொடக்சன் நம்பர் ஒன்-ன் படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இவரது முதல் படம் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இறுதித்திக்கட்ட பணிகளை எட்டி வருகிறது .


தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஒருவர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் , 4 முக்கிய கதாபாத்திரங்களில் அ.கா .வினோத், பரிதாபங்கள் திராவிட் ,நேதாஜி மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . இப்படத்தில் முதல் முறையாக 6 கதாநாயகிகளை அறிமுகம் செய்ய உள்ளனர் .
மேலும் இப்படத்திற்கு நடிகர் சிம்புவின் போடா – போடி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைக்க உள்ளதாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை மற்றும் இளைய தளபதி விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய கு. கார்த்திக் அவர்கள் வசனம் மற்றும் பாடல்களை எழுதவுள்ளதாகவும், நட்பின் சிறப்பையும் காதலின் சிறப்பையும் பேசும் எனவும் ஒரு ‘ஜெனரேஷன் ‘ தலைமுறைக்கு ஏற்ற கலகலப்பனா படமாக இருக்கும் எனவும் இயக்குனர் என்.எல்.ஸ்ரீ தெரிவித்துள்ளார் .
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நரேந்திர குமாரும் திரைப்பட கல்லூரி மாணவர் ஆவார். மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க ப்ரண்ட்ஸ் மேஜிக் பிலிம்ஸ் முழு மூச்சுடன் களமிறங்கி இருக்கிறது.
இந்நிலையில் நேற்று ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் படத்திற்கான திரைக்கதை தொகுப்புகளை சாமியிடம் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் அண்ணா மலையார் வழிபாட்டுக் குழுவை சேர்ந்த தென்காசி மாடசாமி, ராஜபாளையம் செல்வம், மதுரை வடிவலேன் ஆகியோர் உடனிருந்தனர்.
படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் ஆசிரியாக சூப்பர் ஸ்டார், தளபதி ஆகியோர்க்கு பாடல்கள் எழுதியுள்ள 2K கிட்ஸ்களுக்கு பிடித்தமான வெற்றிப்பாடலாசிரியர் கு. கார்த்திக் பணிபுரிகிறார் என காமெடியாக இவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ‘சித்தப்பு’ ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் அந்த பிக்பாஸ் பிரபலம் பிரபலம் யார்? என அறிவிக்கப் போவதாகவும், இப்படம் அனைவரும் கண்டு களிக்கும் படமாக அமையவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது .




