தமிழ் யூடியூப் சேனல்களில் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சோதனைகள் உள்ளிட்ட சேனல்கள் பொதுமக்களிடையே மிகப் பிரபலமாக இருப்பவை. அரசியல் நையாண்டிகள், நகைச்சுவை வீடியோக்கள் ஆகியவற்றால் இந்த சேனல்களில் வெளியிடப்படும் வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இடம்பெறுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ், சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ், தியேட்டர் டி, உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து சேனல்களையும் அதிக அளவிலான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இவை அனைத்தும் ஒரே இரவில் மர்ம நபர்களால் முடக்கப்பட்ட விவகாரம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முடக்கப்பட்ட அனைத்து சேனல்களில் கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் வருகின்றன. அந்த சேனல்களில் இதற்கு முன்னால் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.