அஇஅதிமுக சார்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி அவர்களின் 244 வது நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தினர்.
இந்திய தந்திர போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலியின் 244 வது நினைவு நாளை முன்னிட்டு அஇஅதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் PR. செந்தில் நாதன் எம் எல் ஏ தலைமையில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அஇஅதிமுக ஆட்சியில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் 2014 ஆம் ஆண்டு சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி அவர்களுக்கு அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் வகையில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ராஜா, ஒன்றியச் செயலாளர்கள் செல்வமணி, ஸ்டீபன் அருள் ராஜ், பாசறை மாவட்ட துணைச் செயலாளர்கள் பணக்கரை பிரபு, புல்லுக்கோட்டை சதீஷ் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

