• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

லையன்ஸ் கிளப் சார்பாக பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்..!

Byஜெ.துரை

Nov 28, 2023

சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள உள்ள சிவன்பார்க்கில் லையன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கமம் மற்றும் சமர்ப்பண் ஹெல்த்கேர் பவுண்டேஷன், அண்ணா அரசு ஆயுர்வேதா மருத்துவமனை, இராஜன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இம் முகாமில் உடல் பரிசோதனை, நீரிழிவுநோய், கண் அறுவை சிகிச்சை, மற்றும் ஆயுர்வேதா விழிப்புணர்வும் நடைபெற்றது. சென்னை சங்கமம் நிறுவனர் PMJF. லயன் டாக்டர் S.ஜாகீர்உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம் முகாமில் PMJF லயன் பத்ரிநாத் மற்றும் R.C.MJF. லயன் M.முத்துவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அசோக், பொருளாளர் லயன் தா.ரங்கன் உட்பட மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.