• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில், இலவச மார்பக பரிசோதனை முகாம்..,

ByKalamegam Viswanathan

Oct 15, 2023

மக்கள் நீதி மையம் ரோட்டரி மீட் டவுன் இணைந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, மாபெரும் இலவச மார்பக பரிசோதனை மருத்துவ முகாம் மதுரை மதி தியேட்டர் அருகில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.
மகளிர் மட்டும் குழந்தைகள் நல அணி, மதுரை மண்டல பத்மா ரவிச்சந்திரன் மற்றும் மதுரை மேற்கு ஆறாவது வார்டு வேட்பாளர் கலையரசி வட அமெரிக்கா நார்த் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் தலைவர் பத்மாவதி ஆகியவர்களின் ஏற்பாடு பேரில், மக்கள் நீதி மைய மகளிர் அணி சார்பாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில், மாநிலச் செயலாளர் மகளிர் மட்டும் குழந்தைகள் நல அணி மூகாம்பிகை ரத்தினம் , மக்கள் நீதி மைய நிர்வாகிகளும், மகளிர் அணியினரும் மற்றும்
ரோட்டரி சங்கத் தலைவர் சிவசங்கர், செயலாளர் லெனின் குமார் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர். மருத்துவ பரிசோதனைகள் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தார்கள்.