சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 208 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் வழங்கினார்.
தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகளில் தொலைதூரத்தில் அல்லது கிராமபுரத்தில் இருந்து நீண்ட தூரம் பயணித்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அரசு இலவச மிதிவண்டி திட்டம் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மேலூர் ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் மாணவிகளுக்கு வழங்கினார். இதில் முதற்கட்டமாக 208 மாணவியர்களுக்கு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவமணி மற்றும் கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், மகேஷ், மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
