• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கார் மரத்தின் மீது மோதியதில் நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி குமாரபாளையம் போலீசார் விசாரணை

ByNamakkal Anjaneyar

Apr 5, 2024

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சீராம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சொகுசு காரில் வந்துள்ளனர் இளைஞர்கள் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த தனசேகரன் லோகேஷ் சிவக்குமார் மற்றும் கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதில் ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் இது குறித்த தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பருசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கவின் உடல் மட்டும் காரின் வெளியில் சிக்கியதால் உடலை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.