• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கொலை முயற்சி வழக்கில் நான்கு குற்றவாளிகள் கைது..,

BySeenu

Oct 14, 2025

கோவை மாவட்டம், காரமடை காவல் நிலையத்தில் பதிவான சஞ்சய் குமார் கொலை வழக்கு (Cr.No.341/2025) தொடர்பாக அதில் குற்றம் சாட்டப்பட்ட கமலக்கண்ணன் (21) ஜாமீனில் விடுதலையான பின்னர், 13.10.2025 அன்று காலை கையெழுத்திட அவரது நண்பர் விக்னேஷ்வரனுடன் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளார்.

அப்போது கமலக்கண்ணனால் கொல்லப்பட்ட நபரின் உறவினர்கள் பழி தீர்க்கும் நோக்கில் மத்தம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ நீலகிரி கேஃபே & ரெஸ்டாரண்ட் அருகே இருவரையும் அரிவாளால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் காயம் அடைந்த கமலக்கண்ணனும், விக்னேஷ்வரனும் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள கே.ஆர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதை அடுத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவின் பேரில், இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக வடவள்ளியில் வசிக்கும் விக்னேஷ்வரன் (20), டெலிவரி ஊழியர் என்பவர் அளித்த புகாரின் பேரில் Cr.No: 633/2025 u/s 61(2),109 BNS ( Old sec 120B, 307 IPC) என நான்கு பிரிவுகளின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், காரமடை பகுதியைச் சேர்ந்த குட்டி @ அரவிந்தன் (24), பிரகாஷ் (25), குழந்தை @ கிருஷ்ணராஜ் (45) மற்றும் சுந்தர்ராஜ் (51) ஆகியோர்களை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்விரோத தாக்குதல் பழி தீர்க்கும் நோக்கத்திலான திட்டமிட்ட தாக்குதல் என தெரியவந்தது.

இந்நிலையில், காவல் துறையினர் அந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் பயன்படுத்திய கத்தியை கைப்பற்ற வேண்டி அத்திப்பாளையம் to வளம் மீட்பு பூங்கா சாலையில் மோட்டார் பம்ப் அருகில் குற்றவாளியான குட்டி @ அரவிந்தன் என்பவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை கைப்பற்றினார்.

பின்னர் குற்றவாளி குட்டி @ அரவிந்தன் அங்கு இருந்து தப்பி ஓட முயற்சித்து, அருகில் உள்ள தரைப் பாலத்தில் இருந்து கீழே குதித்து படுகாயம் அடைந்தார் அவரை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த அவரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.