• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா..,

ByT. Balasubramaniyam

Oct 6, 2025

அரியலூர் சட்டமன்ற தொகுதி கடுகூர் ஊராட்சியின் கடுகூர் மற்றும் கோப்லியன் குடிக்காடு கிராமங்களில், 2025–2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறு பாலம் அமைத்தல் பணி (மதிப்பீடு ரூ.5.00 இலட்சம்), சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் பணி (மதிப்பீடு ரூ.5.32 இலட்சம்) ஆகிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில்அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் க.இராமநாதன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளவரசன், அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் பி.சங்கர், உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.