• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Jul 6, 2025

மதுரை பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 1997 முதல் 2000 ஆண்டு வரை படித்த மாணவர்கள் மாணவர்களின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 1997 முதல் 2000 ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

25 ஆண்டு வெள்ளி விழா நிகழ்சியை கொண்டாடிய முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டாடினர்.

கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி, கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள் , பேராசிரியாகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி செயலர் நாராயணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சந்திரன் , துணை முதல்வர் கணேசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் லெஷ்மணன், மற்றும் சுரேஷ், புஷ்பாகரன், பாலசுப்பிரணியம், மணிகண்டன், அடங்கிய வெள்ளி விழா சந்திப்பு குழுவினர் சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் தங்களின் அந்நாளைய (பழைய) நினைவுகளை நினைவு கூர்ந்து நண்பர்களுடன் கலந்து மகிழ்ந்த நெகிழ்சியான நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் பேராசிரியர் ஒருவர் தனது கல்லூரி அனுபவங்களை ரோபோ சங்கர் மற்றும் முன்னாள் மாணவர்கள் பேசிய நகைச்சுவை நிகழ்ச்சியும்,

கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காத போது ரோபோ சங்கர் கல் வீசி செய்த சேட்டைகளை விவரித்துப் பேசிய முன்னாள் மாணவர்கள் “நண்பன்டா “என நகைச்சுவையாக கூறிக்கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் 25வது ஆண்டு வெள்ளிவிழா சந்திப்பு நிகழ்ச்சியில் தற்போது சார்பாய்வாளராக பணியாற்றி வரும் கணேசன் நன்றியுரை கூறினார்.