சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1976 – 77 இல் பல்கலைக்கழக புதுமுக படிப்பில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 49 ஆண்டுகளுக்கு பிறகு அதே கல்லூரியில் சந்தித்துக் கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஆறுமுகசாமி தலைமை வகித்தார், ராதா மோகன் முன்னிலை வகித்தார் ,கனகராஜ் வரவேற்று பேசினார், அதனை தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் முதல்வர் பவுன் ராஜா ,தற்போதைய கல்லூரியின் முதல்வர் அசோக், மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ,முன்னாள் மாணவர்களுக்கு வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தொழிலதிபர் போத்தீஸ் ரமேஷ், சிவகாசி ஏ.ஏ.ஏ.பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் கார்வண்ணன், பெரியார் யூனிவர்சிட்டி முன்னாள் துணைவேந்தர் முத்துசெழியன், ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்கள் பள்ளி பருவத்தின் பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் சென்னை முருகன் பெயிண்ட்ஸ் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.