இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80_வது பிறந்த தினத்தில் குமரியில் கொண்டாட்டங்கள்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் . நவீன இந்தியாவை கணிப்பொறி மற்றும் கை பேசியை அறிமுகப்படுத்தி விஞ்ஞானத்தின் புதிய பரிணாமத்தை அறிமுகப்படுத்திய நவீன விஞ்ஞானத்தின் சிற்பியின் 80_வது பிறந்த நாள் விழாவின் கொண்டாட்டத்தின் வரிசையில்.
நாகர்கோவிலில் டதி பெண்கள் மேல் நிலைப் பள்ளி சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு. நாகர்கோவிலில் மாநகராட்சி காங்கிரஸ் கட்சியின் சார்பில்,மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணிகளின் தலைவர்கள் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்வில் முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு பொருப்பாளர்கள் பங்கேற்று சிரப்பித்தனர்.
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை சாலை ஓர முக்கிய சந்திப்புகளில்.ராஜீவ் காந்தியின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
